BREAKING

பழனியில் சித்த மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியும், கிடப்பில் போட்டது திமுக அரசு – சட்டமன்றத்தில் தகவல்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பரபரப்பாக நடந்துவரும் வேளையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில், ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

கடந்த திமுக ஆட்சியில், இந்திய ஒன்றிய அரசு பழனி கோவிலின் கீழ் ஒரு சித்த மருத்துவமனையை அமைக்க நிதி ஒதுக்கியிருந்தும், வருங்காலத்தில் அம்மருத்துவமனையை நிர்வாகிக்கும் செலவு அதிகமாக இருக்கும் என கூறி அந்த திட்டத்தை நிராகரித்து இருந்ததாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குறிப்பிட்டார்.

அதே வேலையில், ஆலயங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை செய்யாமல், தேவையில்லாத செலவுகளை ஆலய நிதியிலிருந்து பழைய நிர்வாக செய்திருந்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மாதத்துக்கு வெறும் 500 பேர் வந்து போகும் ஆலயம் ஒன்றுக்கு, அடிப்படை தேவைகளே பற்றாக்குறையாக இருக்கும் வேளையில், அதனை பூர்த்தி செய்யாமல், ஒரு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்தை கட்டுவதற்கு ஆலய நிதியை பயன்படுத்த கடந்த நிர்வாகம் திட்டமிட்டிருந்ததையும் அவர் அம்பலப்படுத்தினார்.

இவ்வாறு கோயில் நிதியிலிருந்து சுமார் 246 கோடி ரூபாயை தேவையற்ற திட்டங்களுக்கு செலவு செய்ய கடந்த ஆட்சியில் முடிவு செய்திருந்த வேளையில், புதிய ஆட்சியில், முதல்வர் விஜய் அதனை உடனடியாக தடை செய்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சர் ரமேஷ் கொடுத்த தகவல்களுக்கு முன்னாள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எதிர்ப்பு தெரிவித்தார். அதே வேளையில், ஆலயத்துக்கு வரும் பக்தர்களின் பயன்பாட்டுக்கு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் தேவையே என எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தெரிவித்தார். “அடிப்படை தேவையான கழிப்பறையே போதுமானதாக இல்லாத பொழுது, கார் நிறுத்துமிடத்துக்கு 10 கோடி ரூபாய் செலவு தேவையா?” என அமைச்சர் ரமேஷ் கேள்விக்கு எதிர்கட்சி திமுகவினர் பதிலளிக்க இயலவில்லை.

இந்து அறநிலையத்துறை என்பது, தமிழகத்தின் பெரும்பாலான ஆலயங்களை தனது நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்கும் அமைப்பாகும். ஆலயங்கள் மக்கள் சொத்து, ஆகையால் மக்களின் பிரதிநிதியான அரசாங்கமே அதனை நிர்வாகிக்க வேண்டும் என, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அத்துறை தோற்றுவிக்கப்பட்டது. மலேசியாவின் பினாங்கு-சிங்கப்பூர் இந்து-முகமதிய அறப்பணி வாரியத்தை பிரிட்டிசார் உருவாக்கியதை அடுத்து, அதே முறையில் மெட்ராஸ் மகாண இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading